Posts

Showing posts from October, 2021

உப்பு

Image
உப்பு 🌻🌻🌻🌻🌻 அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்... கல் உப்பை வறுப்பதா...??? ஏன்...??? அவசியம் படியுங்கள்...! சிறுநீரக  பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான்.  மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு. ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும்.  அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும்.  அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும். இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது. அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும்.  அது மட்டுமல்ல,  ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில...

அவுரி

Image
  அவுரி எனப்படும் நீலி இலைகள் சாயம் மட்டும் தருவதல்லா. மிகச் சிறந்த மீலிகை குணங்களைக் கொண்டது. இயற்கையாக கிடைக்கும் மிக சிரந்த மலமிளக்கி. முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் தைலங்களில், கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.    முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய் இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உல்ல மூலிகை அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்களால் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது. இளநரை மற்றும் வெளுத்த முடிக்கு இயற்கை சாயத்தை கொடுக்கும்  மூலிகை. இயற்கை சாயத்தை தயாரிக்க உதவும் .  Contact 9095503503

பல்வலி கண்டங்கத்திரி வைத்தியம்

Image
 🛑🛑🛑🛑🛑🛑🛑🛑 சொத்தைப் பல்  இருக்கிறதா . சொத்தைப் பல்லில் இரண்டு வகை உண்டு ஒன்று வலி இல்லாமல் பல் சொத்தை மட்டும் இருக்கும். இன்னொன்று  வகை சொத்தை பல் தீராத வலியை ஏற்படுத்தும் காரணம் சொத்தை பல்லில் உள்ள புழுக்கள். சொத்தை பல்லில் உள்ள புழுக்களை யாராவது பார்த்துள்ளீர்களா ???? அவை வெள்ளை நிறத்தில் சிறிய வடிவில் இருக்கும். 👇👇👇👇👇👇👇👇 🛑🛑🛑🛑🛑🛑🛑🛑 நான் கூறும் மருத்துவத்தை செய்து பாருங்கள். 👍👍👍👍👍👍👍👍 தேவையான பொருட்கள். கண்டங்கத்திரி காய் விதை. இரண்டு டீஸ்பூன். வேப்ப எண்ணெய். சிறிய பாத்திரம் அதில் நிறைய நீர். அந்த பாத்திரத்திற்கு மேல் பொருந்தும் வகையில் சிறிய மண்சட்டி. அல்லது அட்டை பெட்டி. ( அட்டை பெட்டி  அல்லது மண் சட்டியில் நடுவில் ஒரு ரூபாய் அளவுக்கு ஓட்டை இடவும். செய்முறை. உங்கள் வீட்டில் பழைய அரிவாள்  இருந்தால் .அதை 5 நிமிடங்கள் நன்றாக அடுப்பில் காய்ச்சவும் . தயாராக உள்ள நீர் நிறைந்த பாத்திரத்தின் மேல் சுடான அரிவாளை வைத்து  முனைப் பகுதியில்இரண்டு இடங்களில் வேப்ப எண்ணெய் இரண்டு சொட்டு விட்டதும் கண்டங்கத்திரி விதையை வேப்ப எண்ணெய் மேல் போடவும...

தேமல்

 தேங்காய் எண்ணெய்  பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.  நாயுருவி  நாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.  குமட்டிக்காய்  குமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.  கற்றாழை  கற்றாழையை மேல் தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.  பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது பூசி வந்தால் குணமாகும்.

வியர்க்குரு வைத்தியம்

  வேர்க்குரு (Prickly Heat) 01.   எலுமிச்சம் பழச் சாறில் சந்தனம் கலந்து உடம்பில் பூசி வந்தால் வேர்க்குரு மறையும்.   02.   சந்தனப் பொடியில் எலுமிச்சம் பழச் சாறினைக் கலந்து உடம்பில் பூசி வந்தால், வேர்க்குரு மறையும்.   03.   சோறு வடித்த கஞ்சியை எடுத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால் இரண்டே நாளில் அவை மறைந்து விடும்   04.   பப்பாளிப் பாலை வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால், வேர்க்குரு மறைந்து விடும்.     05.   பப்பாளிப் பாலை வெண்காரத்துடன் கலந்து தடவி வந்தாலும் வேர்க்குரு சரியாகிவிடும்.    06.   வெங்காயச் சாறை வேர்க்குரு மீது தடவி வந்தால், அவை மறையும். உடலும் குளிர்ச்சி பெறும்.  

அகத்தியம்

 அகத்தியம்            நன்னெறி களஞ்சியம் 1). அழகு முகத்திற்கு நட்புணவு ஆரஞ்சும் ஆப்பிளும். 2). கண்களின் நட்புணவு காரட்டும், கறிவேப்பிலையும். 3). காலை காபி நரம்புகளுக்குக் கெடுதி 4). பளபள மேனிக்கு பப்பாளி 5). வெந்து கெட்டது முருங்கை – வேகாமல் கெட்டது அகத்தி. 6). ஈரெட்டு வயதை நீட்டிக்கும் குமரி, நெல்லி. 7). சளி, இருமலை அதிகரிக்கும் மாட்டுப்பால் 8). உப்பும், வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்தின் எதிரிகள் 9). உடல் உறுதிக்கு தேங்காய்ப்பால் 10). தங்கமேனிக்கு ஆவாரம்பூ 11). வயிற்றுக்கு மாதுளை, நெஞ்சுக்கு தூதுவளை 12). சமைத்த உணவு தவறான உணவு 13). மலச்சிக்கலுக்கு மாம்பழம், மாலைக்கண்ணை விரட்டும். 14). ஆஸ்துமாவிற்கு எதிரி ஆரஞ்சும், அன்னாசியும். 15). நாவல், நெல்லி கூட்டணி நீரிழிவை விரட்டிடும். 16). பசிக்காத உணவு குப்பை உணவே. 17). பசிக்காமல் புசிப்பவன் மனிதன் மட்டுமே. 18). நோய்களின் தாய் சமைத்த அமில உணவுகளே 19). வசம்பு நமது மூலிகைத்தாய் – கடுக்காய் நமது இரண்டாவது தாய். 20). தரையில் தவழும் தலக்கீரைச் செடிகள் காலனை விரட்டும். 21). நின்று கொண்டு நீர் அருந்தக் கூடாது. 22). அசையா...

பற்பாடகம்

Image
  பற்பாடகம் மருத்துவ பயன்கள் பற்பாடகம், பேய்புடல், அதிமதுரம், சீந்தில் கொடி, சீந்தில் வேர், கோரைக்கிழங்கு, கொடுப்பை வேர் ஆகியவை வகைக்கு 10 கிராம் அளவு 2 லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 30 மிலி அளவு 3 வேளை 3 நாட்கள் கொடுக்க எந்தவித காய்ச்சலும் நீங்கும். இது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும். பாலில் அரைத்துத் தடவிக் குளித்து வரக் கண் பிரகாசிக்கும், உடல் நாற்றம் நீங்கும், சூடு தணியும். பற்பாடகம், கண்டங்கத்தறி, ஆடாதோடை, சுக்கு, விஷ்ணுகாந்தி, வகைக்கு 40 கிராம் இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 4 வேளை 50 மி லி யாக 3 நாள்கள் கொடுக்க சுரம் போகும். பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் வகைக்கு 10 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி தினம் 6 வேளை 50 மி லி கொடுக்க நச்சுக்காய்ச்சல் போகும். பற்பாடகம் சமூலம் பறித்து நிழலில் உலர்த்தி, வெயிலில் காய வைத்து இடித்து பொடி செய்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட பெண்களுக்கு வெள்ளை படுதல் தீரும். மேலும் சீதவாத சுரம், பித்தகாச ரோகம், உன...

விஷ்ணு கிராந்தி

Image
  விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் - இரைப்பு  குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும். விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு, காய்ச்சல்,  முதலியவை குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலம் (வேர், இலை, தண்டு, பூ அனைத்தும்) அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு தயிரில்  கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும். காரம் புளி நீக்க வேண்டும். வாத நோய் குணமாக விஷ்ணுகிராந்தி செடி ( செடி, வேர், பூ) அனைத்தையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட வாதம், பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். இளைப்பு, எலும்புருக்கி நோய்கள் அனைத்தும் குணமாகும். குழந்தை பேறு உண்டாக விஷ்ணு கிராந்தி, ஓரிதழ் தாமரை இரண்டையும் பால் சேர்த்து அரைத்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட குழந்தை பேறு உண்டாகும். விஷ்ணுகிராந்தி கஷா...