விஷ்ணு கிராந்தி
விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் - இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும்.
விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலம் (வேர், இலை, தண்டு, பூ அனைத்தும்) அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு தயிரில் கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும். காரம் புளி நீக்க வேண்டும்.
வாத நோய் குணமாக
விஷ்ணுகிராந்தி செடி ( செடி, வேர், பூ) அனைத்தையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட வாதம், பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். இளைப்பு, எலும்புருக்கி நோய்கள் அனைத்தும் குணமாகும்.
குழந்தை பேறு உண்டாக
விஷ்ணு கிராந்தி, ஓரிதழ் தாமரை இரண்டையும் பால் சேர்த்து அரைத்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட குழந்தை பேறு உண்டாகும்.
விஷ்ணுகிராந்தி கஷாயம்
விஷ்ணுகிராந்தி – 50 கிராம்
நிலவேம்பு – 50 கிராம்
பற்பாடகம் – 50 கிராம்
சீந்தில் கொடி – 50 கிராம்
ஆடாதொடை – 50 கிராம்
இவை அனைத்தையும் சேர்த்து 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மிளகு, கிராம்பு கலந்து சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தினமும் 3 வேளை குடித்து வந்தால் 5 நாட்களில் காய்ச்சல் குணமாகும் . பெரியவர்கள் 150 மிலி, குழந்தைகள் 50 மிலி குடிக்கலாம்.
டைபாய்டு காய்ச்சல் குணமாக
விஷ்ணு கிராந்தி இலையுடன் தூதுவேளை, கண்டங்கத்திரி, பற்பாடகம் ஆகியவை சமஅளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி வடிகட்டி 10மிலி அளவு சாப்பிட்டு வர டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.
Comments
Post a Comment