பற்பாடகம்
பற்பாடகம் மருத்துவ பயன்கள்
பற்பாடகம், பேய்புடல், அதிமதுரம், சீந்தில் கொடி, சீந்தில் வேர், கோரைக்கிழங்கு, கொடுப்பை வேர் ஆகியவை வகைக்கு 10 கிராம் அளவு 2 லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 30 மிலி அளவு 3 வேளை 3 நாட்கள் கொடுக்க எந்தவித காய்ச்சலும் நீங்கும். இது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும்.
பாலில் அரைத்துத் தடவிக் குளித்து வரக் கண் பிரகாசிக்கும், உடல் நாற்றம் நீங்கும், சூடு தணியும்.
பற்பாடகம், கண்டங்கத்தறி, ஆடாதோடை, சுக்கு, விஷ்ணுகாந்தி, வகைக்கு 40 கிராம் இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 4 வேளை 50 மி லி யாக 3 நாள்கள் கொடுக்க சுரம் போகும்.
பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் வகைக்கு 10 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி தினம் 6 வேளை 50 மி லி கொடுக்க நச்சுக்காய்ச்சல் போகும்.
பற்பாடகம் சமூலம் பறித்து நிழலில் உலர்த்தி, வெயிலில் காய வைத்து இடித்து பொடி செய்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட பெண்களுக்கு வெள்ளை படுதல் தீரும். மேலும் சீதவாத சுரம், பித்தகாச ரோகம், உன்மாதம், பித்த தோஷம் இவைகள் போகும். கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும். கபம், ஆஸ்த்துமா இவை போகும். இம் மூலிகையில் கந்தகச் சத்து அதிகம் உள்ளது
பற்பாடகம், மாம்பட்டை, கோரைக்கிழங்கு, இலவம்பிசின், கஞ்சாங்கோரை, வெட்டி வேர், சுக்கு, மல்லி வகைக்கு 5 கிராம் இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 4 வேலையாக குடிக்க பேதியுடம் கூடிய காய்ச்சல் தீரும்
பற்பாடகம் இலையைப் பாலில் அரைத்து தலையில் தடவி குளித்து வரக் கண்ணொளி மிகும். உடல் நாற்றம், சூடு தணியும்.
இனம்தெரியாத எவ்வகைக் கய்ச்சலாயினும் கைப்பிடி அளவு பற்பாடகம் எடுத்து தேக்கரண்டியளவு மிளகு, சுக்கு, அதிமதுரம், வேப்பங்கொழுந்து இடித்துப் போட்டு தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி அதை காலை, மாலை கொடுத்துவரக் குணமாகும். இவ்விதம் மூன்றுநாள் கொடுக்க வேண்டும்.
Comments
Post a Comment