குங்குமம்


 




குங்குமம்🌺


டப்பா விலை 50 ரூபாய் மட்டுமே 

250 கிராம் விலை  100 ரூபாய் மட்டுமே.

Delivery charge 40


பயன்கள் 🌺

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. அங்கு குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது நமது இந்து மதத்தில் பன்நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கமாகும்.இந்த நெற்றி பொட்டில் திலகமிடுவதற்கு ஒரு விஞ்ஞானரீதியான காரணமும் இருக்கிறது. அதாவது திலத பகுதியில் இருக்கும் “ஆக்னேயம்” எனும் சக்கரம் ஒரு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்கிரமாகும். பிறரை நாம் நினைக்கும் காரியங்களை செய்ய வைக்கும் மனோவசியம் எனப்படும் சித்து கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரால், தன் யோக சக்தியை தன் பார்வையின் மூலம் பிற மனிதர்களின் ஆக்னேய சக்கிரத்தில் செலுத்தி, அவரை தனது விருப்பத்திற்கேற்றவாறு இயக்க முடியும். அதிலும் பெண்களுக்கு இயற்கையாகவே இந்த சக்கர பகுதி சற்று வலுவற்ற நிலையிலேயே இருக்கும் காரணத்தினால் தான் பெரும்பாலும் பெண்கள் இத்தகைய மனோவசியத்திற்கு சுலபமாக இறையாகின்றனர். இப்படிப்பட்ட தீய கலைகளின் பிரயோகங்களிலிருந்து அவர்களை காப்பதற்கே ஆண்களை விட பெண்களுக்கு நெற்றியில் குங்குமத்தால் திலகமிட்டுக்கொள்ளும் நடைமுறை வற்புறுத்தி கூறப்பட்டது.


Comments

Popular posts from this blog

கூந்தல் தைலங்கள்.

சூரணங்கள் பயன்கள்

தாது விருத்தி பொடி