சிவப்பு சந்தனம்
சிவப்பு சந்தனத்த்டை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
முகப்பருக்களை நீக்குவதில் சிவப்பு சந்தனத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது.
சிவப்பு சந்தனத்துடன் சில துளிகள் தூய்மையான தேங்காய் எண்ணெயை கலந்து முகமெங்கும் பூசி சிறிது நேரத்திற்கு பின் முகத்தை அலசுகிற போது வரண்டிருந்த சருமத்திற்கு மென்மை கிடைக்கிறது.
இதுவே எண்ணெய் பதம் மிகுந்த சருமமாக இருந்தால், சிவப்பு சந்தனத்துடன் சிறிது எலும்பிச்சை சாற்றை கலந்து முகத்திற்கு பூசி வரலாம். இந்த பூச்சு உலர்ந்த பின் முகத்தை அலசினால், அதீத எண்ணெய் பதத்திலிருந்து விடுபட முடியும்.
பெரும்பாலனவர்கள் முகத்தின் புற அழகில் சந்திக்கும் பிரச்சனை என்பது பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள். இந்த இரண்டையும் களைவதற்கு சிவப்பு சந்தனத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீரை சேர்த்து பூசி வர, அந்த கரும்புள்ளிகளின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். மேலும் சிவப்பு சந்தனத்துடன் சிறிது தேன் மற்றும் மஞ்சளை கலந்து பூசி வர நல்ல பலன்களை காணலாம்.
சிவப்பு சந்தனத்துடன் தயிர் மற்றும் பாலை கலந்து பூசி வர மிளிரும் சருமத்தை பெற முடியும்.
இன்று செயற்கையான பல அழகு சாதனங்கள் வந்த போதும், சிவப்பு சந்தனத்தின் மகிமை அளப்பரியாதது ஆகும். சிவப்பு சந்தனத்தை எந்த பொருளுடன் கலந்தாலும், உதாரணமாக வெள்ளரி சாறு, பாதம் அரவை, கூழாக்கிய பப்பாளி, குங்கம பூ என எதனுடன் கலந்தாலும் அதற்குண்டான பலன்களை இது வழங்கும்
Comments
Post a Comment