சீந்தில் கொடி
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnnm3Kw1w8Jl-6pMyR2_gZg7xyFkgp0gjCynCE7dD8bhiKP0wxtVYZt4q0TJFSk-xzqH1q2LLfvD9CV8OtFYH9R3NbNnG0i77CGj4YjkonYkEyjTVXL341CauYxUWbEi4OM-DEn4RLyu8/s0/download.jpeg)
ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் ‘ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் ஏதேனும் உண்டா?’ என்று கேட்பவர்களிடம், ‘இருக்கவே இருக்கிறது சீந்தில்’ எனச் சட்டெனப் பதில் உரைக்கலாம்! வயோதிகம் வாட்டும் போதும், தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்திலும், உடல் நலனை மீட்டெடுக்க சீந்தில் போதும்! பல பருவங்களைக் கடந்து வாழும் ‘மூலிகை மார்க்கண்டேயரான’ சீந்தில் கொடி, மனித குலத்தில் பல மார்க்கண்டேயர்களை உருவாக்குகிறது. பெயர்க்காரணம்: சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களைக்கொண்டது சீந்தில். ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயர். அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற அர்த்தத்தில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு. அடையாளம்: இதய வடிவ இலைகளைச் சுமந்துகொண்டு சரசரவெனக் கொடியேறும் தன்மையை இது கொண்டுள்ளது. கொடி வகையானாலும், முற்றிய சீந்தில் கொடி வலிமைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும். ‘மெனிஸ்பெர்மேசியே’ (Menispermaceae) குடும்பத்தின் உறுப்பினரான சீந்தில் கொடியின் தாவரவியல...